உலக காடுகள் தினம், உலக தண்ணீர் தினம், உலக வானிலை தினம் உள்ளிட்ட முப்பெரும் தினம் கடைப்பிடிப்பு!!
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக காடுகள் தினம், உலக தண்ணீர் தினம், உலக வானிலை தினம் உள்ளிட்ட முப்பெரும் தினங்கள் ( மார்ச் 23) கடைப்பிடிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா பேசும்பொழுது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உலக காடுகள் தினம்:உலக காடுகள் தினம் ஆண்டுதோறும் மார்ச் 21 அன்று கொண்டாடப்படுகிறது. காடுகளின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் அவற்றின் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. 2012-ல் ஐக்கிய நாடுகள் சபை இதை அறிவித்தது. "மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!" என்பதை உறுதி செய்ய வேண்டும்.
காடுகளைப் பாதுகாத்தல், வனப்பகுதிகளை நிர்வகித்தல் மற்றும் மரம் நடுதல் போன்ற நடவடிக்கைகளை ஊக்குவித்தல்.
காடுகள் நமக்கு சுத்தமான காற்று, உணவு, மற்றும் மருந்து போன்றவற்றை வழங்குகின்றன. உலக நிலப்பரப்பில் சுமார் 30% காடுகள் உள்ளன.
காடுகள் அழிவதைத் தடுத்து, அடுத்த தலைமுறையினருக்காக இயற்கை வளங்களைச் சேமிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
உலக தண்ணீர் தினம்:
நீரின்றி அமையாது உலகு' என்றார் வள்ளுவர். மனிதனின் அடிப்படைத் தேவையில் உணவு, உடை, உறைவிடம் முதன்மையானது. இதில் உணவு தயாரிக்கத் தேவையான உயிர் திரவம் நீர்தான். மனிதர்களுக்கு மட்டுமல்ல, பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ சுத்தமான நீர் மிகவும் அவசியம். நீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் தேவையும் அதிகரித்திருக்கிறது.
நீரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி 1992ஆம் ஆண்டில் பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக் கான ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் ‘உலக நீர் நாளு’க்கான விதை இடப்பட்டது.
தண்ணீரை வீணாக் காமல் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய தருணம் இது. தண்ணீர் கிடைக்கும்போது அதைச் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். நம் வீட்டருகே உள்ள நீர் நிலைகளை மாசுபடுத்தாமல் அதில் தூய்மையான தண்ணீர் சேருவதை மனிதர்களாகிய நாம்தான் உறுதிசெய்ய வேண்டும்.
2026-ன் கருப்பொருள் நீர் மற்றும் பாலின சமத்துவம்.
சுலோகம் "ஒவ்வொரு துளியையும் சேமிப்போம் என்பதாகும்.
உலக வானிலை தினம்:
உலக வானிலை தினம் இன்று (மார்ச் 23, 2026) கொண்டாடப்படுகிறது.
இந்த நாள் நமது அன்றாட வாழ்வில் வானிலை, காலநிலை மற்றும் நீரின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
இந்த ஆண்டின் கருப்பொருள் "இன்று கவனித்தல், நாளை பாதுகாத்தல்" என்பதாகும். இது பாதுகாப்பை உறுதி செய்ய புவி கண்காணிப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
புயல் முன்னறிவிப்பு முதல் காலநிலை மாற்ற கண்காணிப்பு வரை, வானிலை அறிவியல் நவீன வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாகும்.
இன்றைய மாறிவரும் காலநிலையில் வானிலை அறிவியலின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், உலக வானிலை அமைப்பு நிறுவப்பட்டதையும் இந்த நாள் நினைவுகூர்கிறது என்று பேசினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.
Comments