கந்தர்வகோட்டை ஒன்றியதில் உலக சிட்டுக்குருவி தினம் கடைப்பிடிப்பு...
கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினம், உலக மகிழ்ச்சி தினம், உலக கதை சொல்லும் தினம் உள்ளிட்ட முப்பெரும் தினம் கடைப்பிடிப்பு. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினம், உலக மகிழ்ச்சி தினம், உலக கதை சொல்லும் தினம் உள்ளிட்ட முப்பெரு தினங்கள் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தரவ கோட்டை ஒன்றிய தலைவரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா பேசும்பொழுது
உலக சிட்டுக்குருவி தினம்
அழிந்து வரும் சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, ஆண்டுதோறும் மார்ச் 20 அன்று உலக சிட்டுக்குருவி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2010 முதல் கொண்டாடப்படும் இந்நாளில், நகரமயமாக்கல், கதிர்வீச்சு மற்றும் வாழ்விட இழப்பால் அழியும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சிட்டுக்குருவிகள் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதிலும், விவசாயத்திற்கு உதவுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை பூச்சிகள் மற்றும் களைகளைக் கட்டுப்படுத்தி, மகரந்தச் சேர்க்கைக்கும், விதை பரவலுக்கும் உதவுகின்றன. மேலும், இவை சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தைக் காட்டும் குறிகாட்டிகளாகவும், கலாச்சார ரீதியாக உழைப்பு மற்றும் சேமிப்பின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றன. சிட்டுக்குருவிகளுக்காக வீடுகளில் கூடுகள் அமைத்தல், தானியம் மற்றும் தண்ணீர் வைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
உலக கதை சொல்லும் தினம்
உலக கதை சொல்லல் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 அன்று, வாய்வழி கதை சொல்லும் கலை மற்றும் கலாச்சாரத்தைப் போற்றும் வகையில் உலகளவில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், கதைகளைக் கூறுதல் மற்றும் கேட்டல் மூலம், கதை சொல்லிகள் ஒன்றிணைந்து, வாய்மொழி மரபுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றனர். குழந்தைகளுக்குக் கதை சொல்லும் பழக்கத்தை மீண்டும் ஊக்குவிக்கவும், பெரியவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிரவும் இந்த நாள் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
உலக மகிழ்ச்சி தினம்
உலக மகிழ்ச்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் சபை 2012 ஆம் ஆண்டு முதல் இந்த தினத்தை அறிவித்தது. இது மகிழ்ச்சியாக வாழ்வது அடிப்படை மனித உரிமை என்பதை வலியுறுத்துகிறது என்று பேசினார். உலக கதை சொல்லும் தினத்தில் மாணவர்கள் லத்திகா, முகேஷ் உள்ளிட்டோர் நீதிக் கதைகள் மூலம் கதைகள் சொல்லி மகிழ்ந்தனர். கதை சொல்லும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.
Comments