கோவை மஸ்ஜிதுன் நூர் சுன்னத் ஜமாத் சார்பாக ரமலான் சிறப்பு பிரார்த்தனை...
ஈகை திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இதன் ஒரு பகுதியாக கோவை போத்தனூரிலுள்ள மஜீத்துல் சுன்னத் ஜமாத் மற்றும் ஹிதயத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் சார்பாக நடைபெற்ற பிரார்த்தனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்க்ள் கலந்து கொண்டனர். ரம்ஜான் பண்டிகையினை முன்னிட்டு புத்தாடைகள் அணிந்த படி சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் மேலும் மஸ்ஜிதுன் நூர் சுன்னத் ஜமாத் சார்பாக அங்குள்ள தனியார் பள்ளியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது ..மேலும் நூர் சுன்னத் ஜமாத் திருமறை நகர் பள்ளிவாசல் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ரம்ஜான் சிறப்பு தொழுகையில் பள்ளியின் தலைவர் ஹஜு (எ) சிராஜுதீன், செயலாளர் இஸ்மாயில், முத்தவல்லி சுலைமான், துணைத் தலைவர் ஜாகிர் உசேன், இணை தலைவர் ரியாஸ், துணைச் செயலாளர் உமர், மேலாளர் ரஹீம், கேசியர் இஸ்மாயில்மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
-சீனி,போத்தனுர்.
Comments