Cheran College of Physiotherapy மற்றும் UYIR NGO இணைந்து, உலகத் தலைக்காயம் விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது...
Cheran College of Physiotherapy மற்றும் UYIR NGO இணைந்து, உலகத் தலைக்காயம் விழிப்புணர்வு நாள் முன்னிட்டு கோயம்புத்தூரில் விழிப்புணர்வு பேரணி சிறப்பாக நடத்தப்பட்டது. மார்ச் 20, 2026 அன்று காலை 10.30 மணிக்கு செல்வபுரம் சிவாலயா சிக்னலில் தொடங்கிய பேரணி, Cheran Institute of Health Sciences வளாகத்தில் நிறைவடைந்தது. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், குறிப்பாக ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்துதல் மற்றும் தலைக்காயங்களைத் தடுக்கும் பாதுகாப்பு நடைமுறைகளை பரப்புதல் ஆகியவை இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்களாகும்.
இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக கோயம்புத்தூர் பிரிவு சாலை பாதுகாப்பு அதிகாரி இன்ஜினியர் சுப்புலட்சுமி அவர்கள் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். அவர், “ஹெல்மெட் அணிவது உயிரைக் காக்கும் அடிப்படை பாதுகாப்பு நடைமுறையாகும்” என்று வலியுறுத்தினார். மேலும், காவல் துறையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஜோசப் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றி, பேரணியில் பங்கேற்றனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
Cheran கல்விக் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஸ்நேகா ஸ்ரீதர் அவர்களின் வழிகாட்டுதலில் இந்நிகழ்வு நடைபெற்றது. அதேபோல், Cheran College of Physiotherapy முதல்வர் டாக்டர் அரூனா (Dr. Aroona) அவர்களின் தலைமையில் பேரணி சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த நிகழ்வை டாக்டர் கிரிஸ்பு ஜெப்பராஜ் அவர்கள் ஒருங்கிணைத்து சிறப்பாக ஏற்பாடு செய்தார். பேரணியில் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, சாலை பாதுகாப்பு குறித்த வாசகங்கள் கொண்ட பலகைகள் மற்றும் கோஷங்களின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். “ஹெல்மெட் அணிவோம் – உயிரைக் காப்போம்” என்ற கோஷம் பெரிதும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்வு, சமூகத்தில் பாதுகாப்பு உணர்வை மேம்படுத்துவதோடு, கல்வி நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக அமைந்தது.
-சீனி,போத்தனுர்.
Comments