பெண்கள் தினத்தை முன்னிட்டு Saai Social Services சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு கையேடு வெளியீடு!!

கோவை: சாய் சமூக சேவை (Saai Social Services) என்ற அரசு சாரா அமைப்பு சமூகத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு சமூக நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் ஹோப் காலேஜ் அருகிலுள்ள கிளஸ்டர் மீடியா கல்லூரியில் சமூக சேவையில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்கும் விழாவும், புற்றுநோய் விழிப்புணர்வு கையேடு வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் Ln. Dr. Adv. N. அறிவழகன், Founder, Saai Social Services, திருமதி S. சசிகலா, முன்னாள் மாவட்ட நீதிபதி, திருமதி விஜயலட்சுமி, CEO, Aroma Group of Companies, டாக்டர் கோவர்த்தினி, MS, Plastic Surgeon, திருமதி விஜயலட்சுமி பிச்சாண்டி, முன்னாள் விஞ்ஞானி, ISRO உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது பொதுமக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட புற்றுநோய் விழிப்புணர்வு கையேடு டாக்டர் கோவர்த்தினி அவர்களால் வெளியிடப்பட்டு, அதை முன்னாள் மாவட்ட நீதிபதி திருமதி S. சசிகலா அவர்கள் பெற்றுக் கொண்டார்.

மேலும் சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்து வரும் சிறந்த பெண்கள் மற்றும் சமூக சேவையாளர்களுக்கு "சேவைநாயகி 2026"விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Saai Social Services அமைப்பு பெண்கள் முன்னேற்றம், பார்வை பரிசோதனை முகாம்கள், புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம்கள், ஏழை எளிய குழந்தைகளுக்கு கல்வி வழங்குதல், ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குதல் போன்ற பல்வேறு மனிதநேய சேவைகளை செய்து வருகிறது.

குறிப்பாக பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி உயர்கல்வி வரை ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு Saai Social Services சார்பில் கட்டணமின்றி கல்வி வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது புற்றுநோய் நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு மருத்துவ முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Comments