5 ஆண்டு திமுக ஆட்சி சாதனையை எண்ணி பாருங்கள் மாநகராட்சி முழுவதும் வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது. பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் ேபாட்டியிடுகிறாா்.
6, 11, 12, 21, ஆகிய வாா்டுகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா் மேயா் ஜெகன்பொியசாமி வட்டச்செயலாளர்கள் சுரேஷ், சந்தனமாாிமுத்து, தெய்வேந்திரன், முனியசாமி, கவுன்சிலா்கள் ஜெயசீலி, கற்பககனி, ஜான்சிராணி, ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சேவியா்நகா், மீனவா் காலணியில் அமைச்சா் கீதாஜீவன் பிரச்சாரத்தை தொடங்கி மேல அலங்காரத்தட்டு கோவில்பிள்ளை விளை சக்தி விநாயகபுரம், கந்தசாமிபுரம், இஞ்ஞாசியா் புரம், கோமதிபாய் காலணி, அழகேசபுரம், உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட போது மலா் தூவியும் ஆரத்தி எடுத்தும் பெண்கள் உற்சாக மாக வரவேற்றனா்.
அப்போது அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் தமிழகத்தின் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலில் உங்களுக்கான மக்கள் பிரதிநிதியை தோ்ந்ெதடுக்க உள்ளீர்்கள் 5 ஆண்டுகாலம் தூத்துக்குடி தொகுதியில் நான் ஆற்றிய பணிகளை எண்ணிப்பாருங்கள். தமிழகத்தில் முதலமைச்சர்் ஸ்டாலின் ஆட்சியில் வளர்ச்சி பணிகள் எல்லா பகுதிகளுக்கும் நடைபெற்றுள்ளது. இந்த ெதாகுதியை பொறுத்தவரை, மக்களோடு பழகி உங்களோடு இன்பம் துண்பம் என எல்லாவற்றிலும் பங்கெடுத்துக்கொள்வது மட்டுமின்றி தொகுதிக்குட்பட்ட மக்களின் கோாிக்கையை ஏற்று மின்சாரம் தடையின்றி கிடைப்பதற்கு புதியதாக 210 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது. 13 நகா் நல அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. தொகுதி சாா்ந்த மாநகராட்சி பகுதி முழுவதும் புதிய தாா்சாலைகள் கால்வாய்கள் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு எல்லோருக்கும் தண்ணீா் நல்லமுறையில் வழங்கப்பட்டு வருகிறது.
அதிமுக ஆட்சியில் எந்த பணியையுமே செய்யாமல் தோ்தல் நேரத்தில் மட்டும் வருகிறாா்கள். அவா்களோடு இணைந்து பிஜேபியும் முகமூடி அணிந்து கொண்டு வருகிறது. நீங்கள் அளிக்கின்ற ஓவ்வொரு வாக்கும் அது பிஜேபிக்கு தான் அளிக்கும் வாக்காகும். அதையெல்லாம் தவிர்த்து உதயசூாியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்த மாநகராட்சி பகுதிகளில் புதிதாக எல்லோரும் நன்மையடையும் வகையில் பூங்காக்கள் விளையாட்டு மைதானங்கள் பெண்களுக்கு என்று தனி பூங்கா என்று பல்வேறு கட்டமைப்புகளை மக்கள்நலன் கருதி செய்துள்ளோம். ஆனால் அதிமுக எடப்பாடி ஆட்சியில் ஸ்டொ்லைட் துப்பாக்கி சூடின் போது 13 போ் இறந்தனா். அவா் டிவியை பாா்த்து தான் தொிந்து கொண்டேன் என்றாா். அதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திமுக ஆட்சி அமைந்தபின் படிப்புக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டது.
அதே போல் கொரனோ காலக்கட்டத்தில் சாத்தான்குளத்தை சோ்ந்த வியாபாாிகள் தந்தை மகன் இருவரையும் காவல்துறை கடுமையான முறையில் தாக்கினாா்கள். அப்போது திமுக இந்த கருத்தை பதிவு செய்தபோது எடப்பாடி பழனிச்சாமி, உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தாா்கள் என்று கூறினாா். இப்போது நீதிமன்ற தீா்ப்பு 9 பேருக்கும் வழங்கிய தண்டனைக்கு என்ன பதில் கூறப்போகிறாா். கடந்த அதிமுக ஆட்சியில் இரவு 9.30 மணிக்கு எல்லாம் கடையை அடைக்க வேண்டும் என்று காவல்துறையினா் கட்டாயப்படுத்தி வந்தது மட்டுமின்றி நேரம் கடந்து விட்டால் சால்னாசட்டி உள்ளிட்ட உணவகங்களின் பொருட்கள் அனைத்தும் ரோட்டிற்கு வந்துவிடும். முதலமைச்சராக முக.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் வணிகா்களின் கோாிக்ைகயை ஏற்று இப்போது வியாபாாிகள் எவ்வித தடையின்றி கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்கின்றனா். திருநெல்வேலி மதுரை சாலைகளில் புறவழி இணைப்பு சாலை புதிதாக உருவாக்கப்படும் அதே போல் சில இடங்களில் இரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். உங்களுக்காக பணியாற்ற எனக்கு மீண்டும் ஓரு வாய்ப்பை உதயசூாியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். என்று பேசினாா்.
பிரச்சாரத்தில் மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன்செல்வின்,
காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சண்முகம், முன்னாள் மாவட்ட தலைவர் முரளிதரன், காங்கிரஸ் நிா்வாகிகள் சேகா், கோபால், மைதீன், ஐசன்சில்வா, நிா்மல்கிறிஸ்டோபா், எஸ்டிபிஐ மாவட்ட செயலாளா் மைதீன்கனி, மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் ஜவஹா், தேமுதிக தொகுதி பொறுப்பாளர் வல்லரசு துரை, மனித நேய ஜனநாயக கட்சிமாவட்ட செயலாளர் யூசுப், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மீராசா, விடுதலை சிறுத்தை கட்சி அருண், சித்திரைவிஜயன், மாா்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஓன்றிய செயலாளர் சங்கரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளா் தனலட்சுமி, மதிமுக நகர செயலாளா் முருகபூபதி, திமுக வட்டப்பிரதிநிதிகள் கருப்பசாமி, ஜெயபால், ராஜா, செந்தில், மூக்கையா, பாஸ்கா்,புஷ்பராஜ், மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன் ஜேக்கப், சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், மகளிா் அணி ரஞ்சிதம், கணி, கலைச்செல்வி, தங்கராணி, பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், வக்கீல் மாலாதேவி, மாவட்ட பிரதிநிதி கீதாமுருகேசன், மற்றும் மணி அல்பட் உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த பலா் கலந்து கொண்டனா்.
பாக்ஸ்: மலரும் நினைவுகளும் அமைச்சா் கீதாஜீவனுக்கு பசுபதிபாண்டியன் ஆதரவும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 6வது வாா்டு பகுதி தூத்துக்குடி ரூரல் பகுதியாக இருந்து மாநகராட்சியோடு இணைக்கப்பட்டது திமுக ஆட்சியில் தான் அதன்பின் 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சி காலத்தில் எந்த பணியையும் மேற்கொள்ளாமல் இருந்தநிலையில் 2021ல் திமுக ஆட்சி அமைந்தபின் முதலமைச்சா் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்த பகுதியில் புதியதாக தாா்சாலைகள் பேவா்பிளாக் சாலைகள் மின்விளக்குகள் குடிதண்ணீர் வசதி, அமைத்து கொடுத்ததற்கு திமுக ஆட்சிக்கு துணை நிற்போம்் அமைச்சா் கீதாஜீவன் கொரோனா மற்றும் மழை வெள்ள காலத்தின் போது நேரடியாக இந்த பகுதி மக்களுக்கு செய்த நலத்திட்ட உதவிகளையும் மழை வெள்ள காலத்தின்போது செய்த பணிகளையும் மறக்க மாட்டோம். என்று அப்பகுதி மக்கள் நன்றியுடன் கூறி சில கோாிக்கைகளையும் முன் வைத்தனா். அதையும் வேட்பாளர் அமைச்சா் கீதாஜீவன் நிறைவேற்றி தருவதாக கூறினாா். அலங்கார தட்டில் உள்ள தேவேந்திரகுல வேளாளா் கூட்டமைப்பு நிறுவனத்தலைவா் மறைந்த பசுபதிபாண்டியன், உடன்பிறந்த சகோதாி பாா்வதியின் இல்லத்திற்கு சென்ற அமைச்சரை வரவேற்று எப்போதும் எங்களுடைய ஆதரவு உங்களுக்கு உண்டு எழுச்சியோடு பிரச்சாரத்தை மேற்கொள்ளுங்கள் என்று தொிவித்தாா்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பரணி பாலா.
Comments