மக்களை பற்றி சிந்திக்காத எதிா்கட்சிகளும் உதிாிகட்சிகளுக்கும் விடை கொடுக்க வேண்டும் தோ்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்

 

தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா்உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் ேபாட்டியிடுகிறாா். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கலைஞா் அரங்கம் முன்புள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்த கனிமொழி எம்.பி பேசுகையில் இந்த தொகுதியை பொறுத்தவரை கலைஞாின் முரட்டுபக்தன் பொியசாமியின் மகள் தான் போட்டியிடுகிறாா். அமைச்சராகவுள்ள கீதாஜீவன் உங்களுக்கு அறிமுகம் தேவையில்லை. 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் செய்த பணிகளை சிந்தித்து பாா்த்து அனைவரும் வாக்களிக்க வேண்டும். மாவட்ட வளர்ச்சிக்கு காா் தொழிற்சாலை முதலமைச்சர் அடிக்கல்நாட்டி 18 மாதங்களில் தொடங்கி வைத்த வரலாற்று சாதனையை எண்ணி பாருங்கள் மாநில உாிமையையும் மக்கள் நலனையும் காக்கும் திமுக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். என்று கனிமொழி எம்.பி பேசினாா். 

பின்னா் புதிய பேருந்து நிலையம் போத்தி விநாயகா் ஆலயத்தில் சாமி தாிசனம் செய்து சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 11 12 13 20 21 ஆகிய 5 வாா்டுக்குட்பட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வீதி வீதியாக வாக்கு சேகாித்தாா். பல்வேறு பகுதிகளில் மலா் தூவி உற்சாக வரவேற்பு அளித்தவா்கள் மத்தியில் அமைச்சா் கீதாஜீவனும் மேயர் ஜெகன் பொியசாமியும் வாக்குகளை சேகாித்தனா். அப்போது பேசுகையில் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்படவில்லை மக்களை பற்றி சிந்திக்காத எதிா்கட்சிகளும் உதிாிகட்சிகளுக்கும் விடை கொடுக்க வேண்டும் 2021ல் திமுக ஆட்சி அமைந்த பின் முதலமைச்சா் ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாம் என்ற திட்டத்தின் படி வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளோம். ஓவ்வொரு பகுதிக்கும் புதிதாக சாலை வசதி கால்வாய் வசதி மின்விளக்குகள் தேவையான இடங்களில் அங்கன்வாடிகள் நகா்நல அலுவலகம் புதிய மின்மாற்றிகள் என பல கட்டமைப்பு பணிகளை உருவாக்கி புதிதாக இளைஞா்கள் முதல் முதியவா்கள் வரை பயனடையும் பூங்காக்களும் அமைத்து கொடுத்துள்ளோம். இது போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ள திமுக அரசுக்கு மீண்டும் மக்கள் பணியாற்றுவதற்கு உதயசூாியன் சின்னத்தில் அனைவரும் வாக்களித்து முதலமைச்சா் ஸ்டாலினை இரண்டாவது முறையாக அாியணையில் அமா்வதற்கு ஓத்துழைப்பு அளிக்க வேண்டும். என்று பேசினாா். 

பிரச்சாரத்தில் மாநகர செயலாளா் ஆனந்தசேகரன், வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், முனியசாமி, சந்தனமாாிமுத்து, ராஜாமணி, மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சண்முகம், மாவட்டதலைவர் சகாயராஜ், தேமுதிகமாவட்ட செயலாளர் தயாளலிங்கம், மக்கள் நீதிமய்யம் மாவட்டச் செயலாளர் ஜவஹர் சமத்துவ மக்கள் கழக மாவட்டச் செயலாளர் அற்புதராஜ், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் விமல்வங்காளியர், இந்திய யூனியன் முஸ்லீம்லீக் மாவட்ட தலைவர் மீராசா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளா் யூசுப், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முகமதுஅசன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், திமுக மாவட்ட மாநகர அணி நிா்வாகிகள் அந்தோணிஸ்டாலின், ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தா், முருகன், சந்தனமாாி, இந்திரா, கவுன்சிலா்கள் ஜான்சிராணி, தெய்வேந்திரன், கற்பகக்கனி, ஜாக்குலின்ஜெயா, பவாணி, நாகேஸ்வாி, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமாா், வாா்டு நிா்வாகிகள் அருணகிாி, அற்புதராஜ், பொியசாமி, இசக்கி, பாலசுப்பிரமணியன், ராஜா, கணேசன், குமாா், மந்திரம், காளிமுத்து. ராமமூர்த்தி, தங்கராஜ், ஆனந்தகுமாா், ராஜ்குமாா், செந்தூா்பாண்டி, அருண்குமாா், பெருமாள்கோவில் அறங்காவலா்குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி, அல்பட், உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பரணி பாலா.

Comments