கோவையில் ஃபிக்கி ஃப்ளோ மகளிர் அமைப்பின் புதிய தலைவராக பார்னிகா குப்தா பொறுப்பேற்பு!!
பெண்களின் முழுமையான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு (RISE) ரைஸ் திட்டத்தை விரிவாக செயல் படுத்த உள்ளதாக உறுதி.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோயம்புத்தூர், ஏப்ரல் 10, 2026 - இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை அமைப்பின் மகளிர் பிரிவான பிக்கி ஃப்ளோ மகளிர் அமைப்பு பல்வேறு துறைகளில் பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஃபிக்கி ஃப்ளோ கோவை கிளையின் புதிய தலைவராக பார்னிகா குப்தா இன்று பொறுப்பேற்று கொண்டார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக, கிரெசில் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி மற்றும் பிரபல பியாண்ட் தி ப்ளே புத்தகத்தின் எழுத்தாளருமான ரூபக் குட்வா கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில், முன்னாள் தலைவர்கள், அபர்னா சுங்கு மற்றும் மீனா சுவாமிநாதன் ஆகியோர் 2026–27 ஆண்டிற்கான புதிய நிர்வாக குழுவினரை வரவேற்று, ஃபுளோ கோவை கடந்த ஆண்டு “நிலையான வாழ்வாதார உருவாக்கம்” துறையில் பாராட்டைப் பெற்றதை குறிப்பிட்டு, புதிய நிர்வாகம் இன்னும் பல சாதனைகள் படைக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஃபிக்கி ஃப்ளோ கோவை கிளையின் புதிய தலைவராக பொறுப்பேற்ற, பார்னிகா குப்தா, இந்த ஆண்டில் உறுப்பினர்களுக்கு தரமான, அறிவார்ந்த பயிற்சிகளை வழங்கி, அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கு உண்மையான பயன் அளிக்க இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், கடந்த ஆண்டில் துவங்கப்பட்ட முக்கிய திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல இருப்பதாக கூறிய அவர், நிதி மற்றும் டிஜிட்டல் கல்வி, STEM, ஸ்டார்ட்அப், சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு, சிறு, குறு மற்றும் நடுத்தர மற்றும் ஏற்றுமதி போன்ற துறைகளில் கூடுதல் கவனம் செலுத்த இருப்பதாகவும், அதேபோல், கலை மற்றும் விளையாட்டு துறைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.
குறிப்பாக, இந்த ஆண்டு, ரைஸ் எனும் திட்டத்தின் கீழ் ஃபுளோ கோவை கவனம் செலுத்த உள்ளதாக கூறிய அவர், பெண்களை தனிநபராகவும், தொழில்முறையாகவும், சமூக ரீதியாகவும் உயர்த்தும் ஒரு முழுமையான முன்னேற்றப் பாதையாக ஃபுளோ அமைப்பால் இந்த ரைஸ் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில்,ஃபிக்கி ஃப்ளோ கோவை கிளையின் ,பல்வேறு நிலை நிர்வாகிகளாக ரஞ்சனா சிங்கல், ப்ரீதா பத்ரிநாதன்,மேக்னா கோனா ராமா முனுகூர்,கின்ஜல் ஜாவேரி உள்ளிட்டோர் பொறுப்பேற்று கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.
Comments