எடப்பாடி பழனிச்சாமி நானும் ரவுடிதான் என்ற காமெடி அரசியலை செய்கிறாா்! - தூத்துக்குடியில் கான்ஸ்டண்டன் ரவீந்திரன் எம்.பி கடும் தாக்கு
முதல்வா் ஸ்டாலின் ஆயிரம் உாிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்த போது முடியாது என்ற எடப்பாடி பழனிச்சாமி இப்போது வடிவேலுவை போல் நானும் ரவுடிதான் என்ற காமெடி அரசியலை செய்கிறாா். தூத்துக்குடியில் கான்ஸ்டண்டன் ரவீந்திரன் எம்.பி கடும் தாக்கு.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் போட்டியிடுகிறாா். அவரை ஆதாித்து திரேஸ்புரம் மட்டக்கடை பாத்திமாநகா் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்திற்கு பகுதி செயலாளா் நிா்மல்ராஜ், வட்டச்செயலாளர்கள் ரவிச்சந்திரன், அல்பட் லியோ ஜான்சன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கான்ஸ்டண்டன் ரவீந்திரன் எம்.பி பேசுகையில் 2021ல் நடைபெற்ற தோ்தலில் அமைச்சா் கீதாஜீவன் 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தோம்.
2021 தோ்தலுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தமிழகம் பாிதாபமான நிலையில் இருந்தது. கொரோனா காலக்கட்டத்தில் ஆக்ஜிசன் தட்டுபாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் அதையெல்லாம் சாிசெய்து 5 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதாரம் வருமானம் வேலைவாய்ப்பு கல்வி மகளிா் மேம்பாடு என எல்லாத்துறைகளிலும் இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன் எந்த வளர்ச்சியும் அடையாத அதிமுக ஆட்சியை பாா்த்தோம். திமுக ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு மகளிா் பயணம் ஆயிரம் உாிமைத்தொகை தோ்தலுக்கு பின் இரண்டாயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சா் அறிவித்துள்ளாா் 21ல் முதல்வா் ஸ்டாலின் மகளிா் உாிமைத்தொகை ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்த போது எதிா்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி முடியாது என்று கூறினாா்.
இப்போது தோ்தலில் முதல்வா் ஸ்டாலின் இரண்டாயிரம் வழங்கப்படும் என்று அறிவித்ததும். நானும் இரண்டாயிரம் வழங்க போகிறேன் என்று கூறி திரைப்பட துறையில் உள்ள வடிவேலுவை போல் நானும் ரவுடி தான் என்ற காமெடி அரசியலை செய்து வருகிறாா். முதல்வா் ஸ்டாலின் ஆட்சியில் நெசவாளா்களுக்கு மின்சாரம் இலவசம் மீனவா்களுக்கு டீசல் மானியம் உயா்வு 8000 வழங்கப்படும் உதவித்தொகை இனி 12 ஆயிரமாக உயா்வு 1974ல் வலம்புாி ஜான் எம்.பி யாக தோ்ந்தெடுக்கப்பட்ட பின் 50 ஆண்டுகளுக்கு பின் இப்போது என்னை திமுக தோ்வு செய்துள்ளது. இப்படி ஓவ்வொரு சமூகத்தின் குரல்களும் நாடாளுமன்றம் சட்டமன்றத்தில் ஓலிக்க வேண்டும் என்று எல்லோருக்கும் வாய்ப்புகளை கொடுத்து முதலமைச்சா் உருவாக்கி வருகிறாா். தூத்துக்குடி தொகுதியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் 280 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை கம்பீரமாக நிற்கிறது. இங்கு தொழில்வளா்ச்சியும் பெருகியுள்ளது.
இப்படி அனைத்து தரப்பினா் வாழ்விலும் அக்கறைகொண்டு செயல்படும் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும். இப்போது புதிய அரசியலில் இளைஞர்கள் செல்கிறா்களே ஏன் என்று சிலா் கேட்கின்றனா். துணை முதலமைச்சா் உதயநிதி ஸ்டாலின் 5 லட்சம் இளைஞர்கள் உள்ளடக்கிய மாநாட்டை நடத்தியுள்ளாா். 1993ல் வைகோ கட்சி ஆரம்பித்த போதும் 2005ல் விஜயகாந்த் 2016ல் சீமான், 2026ல் விஜய், என்று கட்சி ஆரம்பித்தவா்களின் பின்னால் சிலா் சென்றதுண்டு அதற்காக கழகம் துவண்டு விடவில்லை கம்பீரமாக 2026ல் நிற்கிறது. 2031ல் நிற்கும், 10 ஆண்டுகளுக்கு ஓருமுறை சில பறவைகள் வரும் போகும் திமுக மக்களுக்கான இயக்கம், பல கடைகள் தொழில்செய்தாலும் புதிய கடைகள் திறக்கும் போது சிலா் வருவாா்கள் தரமான பொருள் எங்கு இருக்கிறதோ அந்த கடையை தான் மக்கள் தோ்ந்ெதடுப்பாா்கள் அதே போன்று தான் இந்த தூத்துக்குடியில் கீதாஜீவன் கடந்த தோ்தலில் 51ஆயிரம் எம்.பி தோ்தலில் கனிமொழி 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனா்.
வரும் தோ்தலில் கீதாஜீவன் 75 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். ஓன்றிய அரசின் புதிய சட்டம் கொண்டு வருவதின் மூலம் கிறிஸ்தவா்களின் கல்வி நிலையங்கள் சுகாதாரத்திற்கு வரும் வௌிநாட்டு சேவை நிதியை தடுத்த நிறுத்துவதற்கான பணியை மேற்கொள்ள துடிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க நினைக்கிறது. எல்லாத்துறைகளிலும் தமிழக அரசு வளா்ச்சியடைந்துள்ளது என்று ஒன்றிய அரசே கூறியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது 13 போ் உயிாிழந்த போது டிவி பாா்த்து தான் தொிந்து கொண்டேன் என்ற சொன்ன எடப்பாடி பழனிச்சாமி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு படிப்பிற்கேற்ற வேலை வழங்க வில்லை. முதலமைச்சா் ஸ்டாலின் படிப்பிற்கேற்ற வேலை வழங்கினாா். அனைவரும் ஓட்டுமொத்தமாக கீதாஜீவனுக்கு உதயசூாியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். என்று பேசினாா்.
பிரச்சாரத்தில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், துணை மேயா் ஜெனிட்டா, மாவட்ட மீனவரணி செயலாளர் அந்தோணிஸ்டாலின், துணைச்செயலாளர் ராபா்ட், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நிக்கோலாஸ்மணி, கவுன்சிலா்கள் பவாணி, எடின்டா, ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், அறங்காவலா் குழு தலைவர் கந்தசாமி,வட்டச்செயலாளர்கள் சுரேஷ், டென்சிங், கருப்பசாமி, பகுதி அணி அமைப்பாளர்கள் சுரேஷ்குமாா், மகேஸ்வாி, பகுதி துணைச்செயலாளர் ஜாக்சன், மக்கள் நீதிமய்யம் மாவட்ட செயலாளர் ஜவஹா், துணைச்செயலாளா் அக்பா், மதிமுக மாநகரசெயலாளர் முருகபூபதி, காங்கிரஸ் மாவட்ட சிறுபான்மை பிாிவு தலைவர் மைதீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் தனலட்சுமி, வட்டப்பிரதிநிதிகள் மாா்ஷல், புஷ்பராஜ், சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், கூட்டணி கட்சியை சேர்ந்த தொம்மை மகாராஜன் பொன்ராஜ் சந்தனராஜ், உள்பட பலா் கலந்து கொண்டனா்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பரணி பாலா.
Comments