கோவையின் உயிர்நாடியான நொய்யல் நதி புனரமைப்பை அனைவரும் ஒன்றிணைந்து வேகப்படுத்த வேண்டும் - சிறுதுளி அமைப்பு கோரிக்கை!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாசுபாடு, ஆக்கிரமிப்பு மற்றும் நீரோட்டக் குறைவு போன்ற சவால்கள் காரணமாக பாதிக்கப்பட்ட நொய்யல் நதியை மீட்டெடுக்க கடந்த 23 ஆண்டுகளாக சிறுதுளி ஒருங்கிணைந்த அணுகுமுறையில் செயல்பட்டு வருகிறது. நதி, நீரோடைகள், தடுப்பணைகள் மற்றும் பாசன வாய்க்கால்களை இணைத்து புனரமைக்கும் இந்த முயற்சிகள் மூலம் சாடிவயல், மசோரம்பு நீரோடை, முண்டந்துறை, புதுக்காடு மற்றும் குனியமுத்தூர் அணைகள் உள்ளிட்ட பல இடங்களில் நீர் சேமிப்பு திறன் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் மேம்பட்டு, ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.
பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் “நொய்யல் ஆற்றில் நடைபயணம்” நிகழ்ச்சி பேரூர் படித்துறை முதல் குறிச்சி அணைக்கட்டு வரை நடைபெற்றது. இதில் திருமதி வனிதா மோகன், நிர்வாக அறங்காவலர், சிறுதுளி, பேரூர் ஆதீனம், நீர்வளத்துறை, தொழில்துறையினர் கொடிசியா , சேம்பர் ஆஃப் காமர்ஸ், சீமா , யங் இந்தியன்ஸ் , விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய வனிதா மோகன் கூறுகையில், “நொய்யல் நதி கொங்கு மண்டலத்தின் உயிர்நாடி. அதை பாதுகாப்பதும், புனரமைப்பதும் அரசு மட்டும் செய்ய வேண்டிய பணி அல்ல; பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட்டால்தான் நீடித்த மாற்றத்தை உருவாக்க முடியும்” என்றார்.
மேலும், “நல்லதண்ணி” திட்டத்தின் மூலம் இயற்கை அடிப்படையிலான முறைகள் பயன்படுத்தி நீர் தரத்தை மேம்படுத்தும் பணிகள் கோவையின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வெட்டிவேர், தாவரங்கள் மற்றும் உயிரியல் வடிகட்டல் முறைகள் மூலம் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு நீர்நிலைகளில் சேர்க்கப்படுகிறது. நாளொன்றுக்கு உருவாகும் அதிகளவான கழிவுநீரை கட்டுப்படுத்தி, நதிகளில் மாசுபாட்டை குறைப்பதில் இத்திட்டம் முக்கிய பங்காற்றுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.
Comments