போக்குவரத்து விதிகளை மீறி, உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு , கைது செய்யுமா காவல் துறை?

கோயம்புத்தூரைச் சேர்ந்த  தங்க நகை வடிவமைப்பாளர் UMT ராஜா, தனது தனித்துவமான கலைப்படைப்புகளுக்காக அறியப்படுபவர். கமல்ஹாசனின் உருவப்படத்தை முத்தங்களால் உருவாக்கியது, தேர்தல் விழிப்புணர்வுக்காக 2 கிராம் தங்கத்தில் பூட்டு-சாவி வடிவமைத்தது, தர்பூசணியில் சுதந்திர தியாகிகளை செதுக்கியும், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100 % அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இருசக்கர வாகனத்தை இயக்கியவாறு 100% "எனது வாக்கு,  எனது உரிமை" என எழுதியும்,  கைவிரலில் மை இருப்பதுபோல , வாயில் பிரஷை வைத்து வெள்ளைத்தாளில்,   வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இரு சக்கர வாகனத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் அமர்ந்திருக்கின்றனர். யாரும் ஹெல்மெட் அணியவில்லை. போக்குவரத்து விதிமுறைகளை மீறி ,  இருசக்கர வாகனத்தை  இயக்கியவாறு,  விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன் என்கிற பெயரில்,  உயிருக்கு ஆபத்தான முறையில் செயல்படுவதை காவல்துறை கண்டிப்பதோடு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Comments