ஜீப் பள்ளத்தாக்கில் விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்!!!
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் நாரககாணத்தில் நேற்று இரவு ஜீப் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது அதில் இருவர் பலி.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எர்ணாகுளம் மனத்தூரை சார்ந்தவர்கள் குருசுமலைக்குச்(சிலுவை மலை) சென்றுவிட்டுத் திரும்பியபோது எதிர்பாராத விதமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. அந்த வாகனம் 200 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தது. ஜீப்பில் சுமார் 12 பேர் பயணம் செய்தனர். சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் மன்னத்தூரைச் சேர்ந்த சாரம்மா மற்றும் ஆறு மாதக் குழந்தை ஆவர். . அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
காயமடைந்தவர்கள் இடுக்கி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணாறு.
Comments