லேசான காயத்துடன் தப்பிய சுற்றுலாப் பயணிகள் வாகனம்!!

வால்பாறை: திருச்சியிலிருந்து வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வந்த வாகனம் மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் இருந்து நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தது. பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.  

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

திருச்சி அண்ணா நகரை சேர்ந்த கிருஷ்ணன்,அவரது மனைவி, மகள்,மகன் மற்றும் குழந்தைகள் நான்கு பேரும் வால்பாறைக்கு சுற்றி பார்க்க வந்தனர். மூன்றாவது கொண்டை ஊசி வளைவு வரும் பொழுது கார் பிரேக் பிடிக்காமல் நிலைத்தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து மூன்றாவது வளைவு இடது புறமாக புதருக்குள் சென்றது.

இது போன்ற விபத்துக்கள் நடைபெறுவதற்கு காரணம் வாகனங்களில் தீர்களை மாற்றாமல் செல்வதுதான். மேடு பள்ளங்களில் கீர்களை மாற்றி சரியாக சென்றால் விபத்துக்களை தவிர்க்கலாம் என்று ஓட்டுனர்கள் கூறிவருகின்றனர்.

வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருவதனால் வாகனங்களை சரிபார்த்த பிறகு கவனமாக இயக்க வேண்டும் என வால்பாறை வட்ட காவல்துறை ஆய்வாளர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக 

-திவ்யக்குமார்.

Comments