கோவை நரசிம்மநாயக்கன்பாளையம், அப்புலுபாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழா சக்தி கரகம், அக்னி கரகம் அழைத்தல் நடைபெற்றது!!
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம், அப்புலுபாளையம் அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில் சித்திரை மாதத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
இன்று காலை நரசிம்மநாயக்கன்பாளையம் மெயின் ரோடு அருள்மிகு வரசக்தி விநாயகர் கோவிலில் இருந்து சக்தி கரகம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பொங்கல், மாவிளக்கு பூஜைகள் மற்றும் கிடா வெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை வரசக்தி விநாயகர் கோவிலில் இருந்து அக்னி கரகம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிசேக பூஜைகள் நடைபெற்றது. சுற்றுவட்டாரங்களில் இருந்து திரளான பகதர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ராஜேந்திரன், குணசேகரன், தாமோதரசாமி, பாலாஜி, கேசவன், ராஜகோபால், வீரபத்திரன், கவுன்சிலர் சித்ரா மற்றும் ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோயில் கமிட்டியினர் செய்திருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.
Comments