கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக ஆட்டிச தினம் குறித்து விழிப்புணர்வு!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக ஆட்டிச தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

உலக ஆட்டிச தினம் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய தலைவரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா பேசும் பொழுது 2007-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏப்ரல் 2-ஆம் தேதியை உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினமாக அறிவித்ததிலிருந்து, ஆட்டிசம் பாதிப்புள்ள நபர்களுக்கான மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை முழுமையாகப் பெறுவதை ஊக்குவிக்கவும், சமூகத்தில் அவர்களின் சமமான பங்களிப்பை உறுதி செய்யவும் ஐ.நா. பணியாற்றி வருகிறது.

2026 ஆம் ஆண்டு உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட கருப்பொருள் , ஆட்டிசமும் மனிதநேயமும் என்பதாகும். இது, “ஒவ்வொரு உயிருக்கும் மதிப்பு உண்டு” என்ற சிந்தனையை எடுத்துக்காட்டுகிறது என்று பேசினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா.

Comments