கூலிப்படையினரை வைத்து தனது தம்பி கொலை செய்ய முயல்வதாக அண்ணன் குடும்பத்தினருடன் வந்து புகார்!!
தூத்துக்குடி: சொத்து தகராறில் தனது தம்பி கூலிப்படையினரை வைத்து தன்னை கொலை செய்ய முயல்வதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட அண்ணன் குடும்பத்தினருடன் வந்து புகார்
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கிராமத்தைச் சார்ந்த அய்யம்பெருமாள், இவரது மூத்த மகன் சுயம்புலிங்கம் இவருக்கு நான்கு சகோதரர்களும், 3 சகோதரிகளும் உள்ளனர்.
இந்நிலையில் அவரது தம்பி அணில் சிவலிங்கம் கூலிப்படையினரை வைத்து தன்னை கொல்ல முயல்வதாக அவரது அண்ணன் சுயம்புலிங்கம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது குடும்பத்தினருடன் வந்து புகார் மனு அளித்தார்.
பின்னர் அவர் கூறுகையில், எனது தம்பி அணில் என்ற சிவலிங்கம் பெங்களூரில் தொழில் செய்து வருகிறார். அங்கு நிறைய மோசடி வேலையில் ஈடுபட்ட நிலையில், தனது அண்ணன் சொத்தை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்ற நோக்கத்தோடு இதுகுறித்து வழக்கானது நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அது தனிப்பட்ட முறையில் நான் சம்பாதித்த பணம் மூலம் சொத்து வாங்கப்பட்டதாக நீதிமன்றம் கூறியதை தொடர்ந்து, ஆவேசம் அடைந்த அவரது தம்பி அணில் சிவலிங்கம் தனது சகோதரர் சுயம்புலிங்கத்தின் காரை எரித்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
அந்தப் பகுதி காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஜீவமணி தர்மராஜ் மாற்றப்பட்டதை தொடர்ந்து ஊர் பக்கம் வராமல் இருந்த அனில் சிவலிங்கம் ஆய்வாளர் மாறியதை தொடர்ந்து மீண்டும் ஊருக்குள் வந்து தனது சொத்தில் பங்கு கேட்டு பிரச்சனை செய்து வருகிறார்.
கடந்த 26 ஆம் தேதி சுயம்புலிங்கம் சென்ற காரை மற்றொரு கார் மூலம் பின் தொடர்ந்து வந்த அணில் சிவலிங்கம் வேலாயுதபுரம் அருகே காரை குறுக்காக நிறுத்தி மறித்து உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் எனக்கூறி, நீ இறந்தவுடன் உனது சொத்தை உனது மனைவி மட்டும் பிள்ளைகளிடம் கையெழுத்து வாங்கி விற்காமல் விடமாட்டேன் என கூறி மிரட்டியுள்ளார்.
மேலும் கடந்த இரண்டாம் தேதி வேம்பாரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே கூலிப்படையினரை வைத்து தன்னை கொலை செய்ய காத்துக் கிடப்பதை அறிந்த சுயம்புலிங்கம் இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலையத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததை தொடர்ந்து இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்ததாக அவர் கூறினார்.
மேலும் தன்னை கூலிப்படையினரை வைத்து தனது தம்பி கொலை செய்ய திட்டமிடப்பட்டு தன்னை வேவு பார்த்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார் ஆகவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி இன்று மனு அளித்ததாக அவர் தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பரணி பாலா.
Comments