செல்வப் பெருந்தகைக்கு பண மாலை அணிவித்த போட்டோ உடன் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!!

கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி கோவை காமராஜ் பவன் அலுவலகம் முன்பாக செல்வப் பெருந்தகைக்கு பண மாலை அணிவித்த போட்டோ உடன் காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

காங்கிரஸ் கட்சி சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மொத்தம் உள்ள 28  தொகுதிகளில் 27 வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்,  இதில் கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம் சிங்காநல்லூர் தொகுதிகளுக்கு கவுண்டம்பாளையம் தொகுதிக்கு  சூரிய பிரகாஷ் , மற்றும் சிங்காநல்லூர் தொகுதிக்கு வேட்பாளராக ஸ்ரீநிதி நாயுடு ஆகியோரை அறிவித்துள்ளனர். 

இந்நிலையில்  மூத்த நிர்வாகிகள் பலர் இருக்கையில் மாற்றுக் கட்சியில் இருந்து வந்த ஸ்ரீநிதி நாயுடுக்கு சிங்காநல்லூர் தொகுதி ஒதுக்கப்பட்டது ஏற்புடையதல்ல எனவும் அதேபோல 27 வயதான சூரிய பிரகாசுக்கு கவுண்டம்பாளையம் தொகுதி ஒதுக்கியதும் ஏற்படையது அல்ல என குற்றம் சாட்டிய காங்கிரஸ் நிர்வாகிகள் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா,காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மற்றும் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வபெருந்தகை ஆகியோர் கழுத்தில் பண மாலை அணிந்திருந்த புகைபப்டத்தை கையில் ஏந்தி எம் எல் ஏ சீட்டை விற்காதே ! வேட்பாளரை மாற்றிடு என மாறி மாறி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.


Comments