தி இந்தியன் பப்ளிக் சார்பாக சைமன் எனும் தென்னிந்திய மாதிரி ஐக்கிய நாடுகள் மாநாடு நடைபெற்றது!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உலகளாவிய அறவியல் மற்றும் நொழி்ல் நுட்ப மாற்றத்தில் மாறி வரும் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்து இளம் மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கோவை யில் (SIMUN) சைமன் எனும் தென்னிந்திய மாதிரி ஐக்கிய நாடுகள் அமைப்பு மாநாடு தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது.தேசிய அளவில் மூன்று நாடுகள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழா தி இந்தியன் பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளியின் சி.இ.ஓ.ஜெய்ராம் பாலகிருஷ்ணன், சி. ஓ. ஒ. ராஜ்குமார், சி.ஏ.ஓ.சோனாலி கீத் மற்றும் பள்ளியின் தலைமை அலுவலர் இப்சன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், இந்திய வருவாய் துறை அதிகாரி,சரக்கு சேவை வரி புலனாய்வு தலைமை இயக்குனர் ஜெயப்பிரகாசம் கலந்து கொண்டு மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.
மூன்று நாட்கள் நடைபெற்ற மாநாட்டில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
குறிப்பாக மாநாட்டில் ஜி 20,யுனெஸ்கோ,உலக சுகாதார அமைப்பு,ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகளை மையமாகக் கொண்டு 30-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டன.
இதில்,மாணவர்கள் உலக நாடுகளின் பிரதிநிதிகளாக செயல்பட்டு, பல்வேறு சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதங்களில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு குழுவிலும் மாணவர்கள் முக்கியமான உலக பிரச்சினைகளை எடுத்துக்கொண்டு தங்களின் பேச்சுத் திறன், ஆராய்ச்சி மற்றும் கருத்துக்களை முன்வைக்கும் திறன்களை வெளிப்படுத்தினர்.
மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் உலகளாவிய பார்வையை விரிவுபடுத்தும் வகையில் நடைபெற்ற சைமன் மாநாடு கல்வி கற்பித்தலில் புதிய நிகழ்வாக அமைந்தது குறிப்பிடதக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.
Comments