ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலை துறை சார்பாக சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலை துறை சார்பாக சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த திருவிழாவில் 11 நாள் வெகு விமர்சியாவும் சிறப்பாகும் இந்த விழா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தின் அடிப்படையில் ஒவ்வொரு துறை சார்ந்தும் நடைபெறும் இதில் முதலாவது நாள் (20.4.26) திங்கள் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கிய முதல் நாள் முதலியார்யார் சமுதாயம் மண்டகப்படி மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு முதலாவது நாள் திருவிழா நடைபெற்றது.

2  ம் நாள் திருவிழாவாக இல்லநத்து பிள்ளைமார் சமுதாய மண்டபடியாகவும்,    3 ம் நாள் திருவிழா வாணிய செட்டியார் சமுதாய மண்டபடியும், 4 ம் நாள் காசுக்கார செட்டியார் சமுதாய மண்டபடியும், 5 ம் நாள் விளாத்திகுளம் காவல்துறையினர் மண்டபடியாக, 6 ம் நாள் துளசி பற்றி தேவர் சமுதாய மண்டபடியாகவும்,7 ம் நாள் விளாத்திகுளம் வருவாய் துறையினர் அலுவலர்கள் சார்பாக நடைபெற்ற இந்த மண்டபபடி திருவிழாவில் பூஜை ஸ்ரீ நடராஜர் சிறப்பு அபிஷேகம் செய்து ஸ்ரீ நடராஜர் சபாபதி சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளல் செய்தார். 

இந்த 7 ம் நாள் திருவிழாவில் வட்டாட்சியர் கண்ணன் தலைமையில்  மாரிமுத்து VAO  தூத்துக்குடி தமிழ்நாடு கிராம அலுவலர்கள் சங்கம் மண்டல செயலாளர்  மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கிராம நிர்வாகிகள் தலையாரிகள் அலுவலக பணியாளர்கள் என பூஜையில் ஏராளமாக கலந்து கொண்டு இவர்களுடன் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்    சாமி தரிசனம் பெற்று சென்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.


Comments