கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிபட்டி நடுநிலைப் பள்ளியில் உலக சுகாதாரத் தினத்தை முன்னிட்டு வெப்ப அலைகள் குறித்து விழிப்புணர்வு!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
1950-ஆம் ஆண்டு முதல், இந்த நாள் உலக சுகாதார அமைப்பின் முக்கிய உலகளாவிய சுகாதாரப் பிரச்சாரங்களில் ஒன்றாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், உலகளாவிய அனைத்துப் பிரச்சாரங்களையும் முன்னெடுப்புகளையும் வழிநடத்த ஒரு கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்தக் கருப்பொருள், தற்போது மிகவும் அவசரமான உலகளாவிய சுகாதார முன்னுரிமை எது என்பதைப் பொறுத்து அமைகிறது. 2026 ஆம் ஆண்டு கருப்பொருள்களான
பெரும்பாலும் கவனிக்கப்படாத முக்கியமான மருத்துவத் தகவல்களை வெளிக்கொணர்வதன் மூலம் இந்த இடைவெளியை நிரப்புகிறது. "ஆரோக்கியத்திற்காக ஒன்றிணைவோம். அறிவியலுடன் துணை நிற்போம்"
உலகளாவிய சுகாதார பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் இந்த நாள் அர்ப்பணிக்கப் பட்டுள்ளது என்று பேசினார்.
தற்போது கோடைகாலம் ஆரம்பித்துள்ளதால் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும், வெளியே செல்லும் பொழுது உங்கள் தலையை தொப்பி அல்லது துணியால் மூடிக்கொள்ளுங்கள், நிழலுக்காக குடையை பயன்படுத்துங்கள், வெளிப்புற நடவடிக்கைகளின் போது நிழலில் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள், எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளை உண்ணுங்கள், வெயிலின் உச்ச நேரத்தில் மதியம் 12 மணி முதல் 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும், சூடான எண்ணெய் காரமான மற்றும் துரித உணவுகளை தவிர்க்கவும், அதிக வெப்பத்தில் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், உடல்நிலை சரியில்லாமல் உணர்ந்தால் மருத்துவ உதவியை நாடுவதற்கு தாமதிக்க வேண்டாம் என வெப்ப அலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிறைவாக ஆங்கில ஆசிரியை சிந்தியா நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா.
Comments