கந்தர்வக்கோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் காலநிலை மாற்றம் குறித்து கருத்தரங்கு!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்வில் காலநிலை மாற்றம் என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய தலைவரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா பேசும்பொழுது;
காலநிலை மாற்றம் என்பது நீண்ட கால மாற்றமாகும். அதாவது சுமார் 15 வருடங்களில் பூமியின் காலநிலையில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக, கடல் மட்டம் எவ்வளவு உயர்ந்துள்ளது, பனிமலைகள் எவ்வளவு உருகின, உலகின் வெப்பநிலை எவ்வாறு அதிகரித்துள்ளது என்பதைக் குறிப்பதுதான் காலநிலை மாற்றம்.
இது முக்கியமாக புதைபடிவ எரி.பொருட்களை எரித்தல் போன்ற மனித நடவடிக்கைகளால் தூண்டப்படுகிறது. இது கடல் மட்ட உயர்வு, தீவிர வானிலை மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையின்மைக்கு வழிவகுக்கிறது. இது உலகம் முழுவதும் உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகிறது.
நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் போன்ற வாயுக்கள் வளிமண்டலத்தில் அதிகரித்து வெப்பத்தைத் தக்கவைக்கின்றன.
மரங்கள் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுகின்றன. காடுகளை அழிப்பது, இந்த வாயுக்கள் வளிமண்டலத்தில் தங்குவதை அதிகரிக்கிறது.
தடுப்பு நடவடிக்கைகள்:
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களான (சூரிய ஒளி, காற்று) ஆற்றலைப் பயன்படுத்துதல்.
மரம் வளர்த்தலை ஊக்குவித்தல்.
ஆற்றல் சேமிப்பு மற்றும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்தல்
உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா.
Comments