தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள அதிரடித் திரைப்படமான 'கரா' (KARA) திரைப்படம் வெளியீடு!!

படம் பார்க்க வந்தவர்களை மலர் மழை தூவி உற்சாக வரவேற்பு கரா தனுஷ் கெட்டப்பில் வந்த ரசிகர் கவனம் ஈர்ப்பு!!

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

தனுஷ் நடிப்பில்,விக்னேஷ் ராஜா இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள,கரா திரைப்படம் இன்று தமிழகத்தில் வெளியானது.

பெரும் எதிர்பார்புக்கிடையே அதிரடித் திரைப்படமாக உருவாகி உள்ள  'கரா' வெளியானதை முன்னிட்டு கோவையில் திரையரங்கம் முன்பாக உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை துடியலூர் பகுதியில் உள்ள திரையரங்கில் கோவை மாவட்ட தனுஷ் தலைமை நண்பர்கள்  நற்பணி மன்றம் சார்பாக மலர் மழை தூவி படம் பார்க்க வந்தவர்களை வரவேற்பு வழங்கப்பட்டது.

படம் பார்க்க தனுஷ் ரசிகர் ஒருவர் கரா படத்தில் தனுஷ் வருவது போன்ற கெட்டப்பில் வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தங்கள் அபிமான நடிகரின் திரைப்படத்தை காண ரசிகர்கள் உற்சாகமாக  திரையரங்கத்திற்கு வந்து  கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்..

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Comments