கோவையில் (Oceans of Knowledge) எனும் பெருங்கடல் அறிவு நூல் வெளியீட்டு விழா!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழகத்தை சேர்ந்த மறைந்த கடல் சார் விஞ்ஞானி,டாக்டர் ஆர். எஸ். லால் மோகன் இந்தியாவின் குறிப்பிடத்தக்க கடல்சார் (Marine) விஞ்ஞானிகளில் ஒருவராகப் பரவலாக அறியப்பட்டவர்.
இந்தியாவில் கடல் ஆராய்ச்சித் துறையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்த இவரின் வாழ்க்கை குறிப்பு தொடர்பான (Oceans of Knowledge) எனும் பெருங்கடல் அறிவு நூல் வெளியீட்டு விழா கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது..
நூலாசியரும்,ஏ.ஜே.கே.கல்வி நிறுவனங்களின் தலைவரும் ஆன முனைவர் அஜித்குமார் லால் மோகன் தலைமையில் நடைபெற்ற விழாவில், நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக,அய்யாவழி சாமி தோப்பு பால பிரஜாபதி அடிகளார்,ஜி.ஆர்.ஜி.கல்வி நிறுவனங்களின் சேர் பெர்சன் முனைவர் நந்தினி ரங்கசாமி,கோவை திருமண்டல உப தலைவர் மற்றும் செயலாளர் டேவிட் பர்னபாஸ்,ஆர்த்தோ ஒன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் முனைவர் டேவிட் வி. ராஜன்,மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு மற்றும் சுஜாதா ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் தமிழ் மற்றும் ஆங்கில பதிப்புகளாக உருவாகி உள்ள Oceans of Knowledge”) எனும் பெருங்கடல் அறிவு புத்தகத்தை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டு பேசினர்..
கடல் உயிரியல் மற்றும் கடல்சார் வளங்களின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளில் டாக்டர் ஆர்.எஸ்.லால் மோகன் செய்த பங்களிப்புகள் குறித்தும்,இயற்கை வளங்கள் பாதுகாப்பில் அவர் செய்த முயற்சிகள் குறித்தும் சிறப்பு விருந்தினர்கள் பேசினர்..
குறிப்பாக கடல் உயிரினங்கள், கடல் சூழல் மற்றும் வளங்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வுகளில் சிறந்து விளங்கிய விஞ்ஞானி லால் மோகனின் வாழ்க்கை குறிப்பை இந்த நூலில் வெளிப்படுத்தி உள்ளதாக விழாவில் கலந்து கொண்டோர் நினைவு கூர்ந்தனர்.
கல்வி, ஆன்மிகம் மற்றும் சமூக முன்னேற்றத்தை ஒருங்கிணைக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு பல்வேறு துறைகளின் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டதன் மூலம் முக்கியத்துவம் பெற்றது.
விழா இறுதியில் ஏ.ஜே.கே.கல்வி நிறுவனங்களின் இயக்குனர் பிந்து அஜீத் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.
Comments