கோவை நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை: 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்தல்!

கோயம்புத்தூரில் உள்ள நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இத்தேர்வில் இப்பள்ளியிலிருந்து தேர்வு எழுதிய 222 மாணவர்களில், அலகு மீனாள் C என்ற மாணவி 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

அவரைத் தொடர்ந்து, யேஷ்வந்த் (497 மதிப்பெண்கள்) மாநில அளவில் இரண்டாம் இடத்தையும், ரவிவர்மன் (496 மதிப்பெண்கள்) மூன்றாம் இடத்தையும் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். மேலும், விக்னேஸ்வரி  (495), மேகா  (494), பிரணவசுதன் K (494), ஜோகேஷ் குகா  (492), தன்யா (492), காயத்ரி  (491), முகேஷ் ஜெயந்த் S (491), நிரஞ்சனா  (491) மற்றும் ஜனஸ்ருதி (490) ஆகிய மாணவர்களும் மிக உயர் மதிப்பெண்களைப் பெற்று சாதனையாளர்களாக உருவெடுத்துள்ளனர். மாணவர்களின் இந்த அரிய சாதனைக்காக கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் IAS, கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் IAS, பள்ளியின் தலைவர் டாக்டர் பி. மோகன்சந்தர், செயலாளர் உமா மோகன், மெட்ரிக் பள்ளி முதல்வர் பேபி, துணை முதல்வர் வனிதா மற்றும் சிபிஎஸ்இ (CBSE) பள்ளி முதல்வர் டாக்டர் கீதா ஆகியோர் தங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

இப்பள்ளியில் கணித பாடத்தில் 8 மாணவர்களும், அறிவியலில் 13 மாணவர்களும், சமூக அறிவியலில் 7 மாணவர்களும் 100-க்கு 100 முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்; தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் தலா 99 மதிப்பெண்களை அதிகபட்சமாகப் பெற்றுள்ளனர். மதிப்பெண் வாரியாக 490-க்கும் மேல் 11 மாணவர்களும், 450 முதல் 489 வரை 74 மாணவர்களும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Comments