கோவையில் இரண்டாம் ஆண்டாக தேசிய மனிதவள மேம்பாட்டு தினம்!!

பல்வேறு நிறுவனங்களில் மனிதவளம் சார்ந்த துறையில் பணியாற்றுபவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பு!!

சர்வதேச  மனிதவள மேம்பாட்டு தினத்தை கொண்டாடும் விதமாக  கோவை ரூட்ஸ் குழும நிறுவனம் மற்றும் கோயம்புத்தூர் எச் ஆர் டி (HRD) சர்க்கிள் ஆகியோர் சார்பாக சர்வதேச  மனிதவள மேம்பாட்டு தின விழா கோவை உற்பத்தி திறன் குழு அரங்கில் நடைபெற்றது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விழாவில் ரூடஸ்  குழும நிறுவனங்களின் இயக்குனர் கோவை  மனித வள  மேம்பாட்டு குழு நிறுவன  தலைவரும், ஆன டாக்டர் கவிதாசன் தலைமை  வகித்தார். 

விழாவில்  சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் முனைவர்  கண்ணன் கலந்து கொண்டு பல்வேறு நிறுவனங்களில் மனித வள மேம்பாட்டு துறை சார்ந்த அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

முன்னதாக விழாவில் பேசிய அவர்,நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் தொழிலாளர் பிரச்னைகளில் மனிதவள மேம்பாட்டு துறை முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார்.

தற்போது வேகமாக மாறி வரும் தொழில் நுட்ப மாற்றங்கள் தொழில் நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக இருப்பநாக தெரிவித்த அவர்,நவீன தொழில் நுட்பங்கள் எவ்வளவு வந்தாலும் அவற்றை மனிதர்களே கையாள்வதாக அவர் சுட்டி காட்டினார்.

நிகழ்ச்சியில்  ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்பொன்னுசாமி, ரூட்ஸ் நிறுவனங்களின் தலைமை மனித வள மேம்பாட்டு அதிகாரி சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Comments