தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் ரகமதுல்லா வாழ்த்து!!
கந்தர்வ கோட்டை ஒன்றியத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் ரகமதுல்லா (மே 02) வாழ்த்து தெரிவித்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்கு தயார் செய்து மே 3ஆம் தேதி நீட் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செய்தித் தொடர்பாளர் ரகமதுல்லா வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 மையங்களில் மொத்தம் 3,166 மாணவ மாணவிகள் நீட் தேர்வினை எழுதி இருக்கிறார்கள்.இதில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 469 மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அரசு பள்ளிகளில் விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு குறுகிய காலத்தில் புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, இலுப்பூர் ஆர்சி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று மையங்கள் அமைக்கப்பட்டு குறுகிய கால பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை எளிதில் எதிர்கொள்ளக்கூடிய வகையில் அவர்களுக்கு மாதிரி தேர்வு நடத்தப்பட்டது.இதற்காக தொடர்ந்து பயிற்சி எடுத்து பயின்று வருகிறார்கள்.
அரசு பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கப்பின் அடிப்படையில் கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்து வருகிறார்கள். நீட் தேர்வு எழுத சொல்லும் மாணவ மாணவிகள் குறித்த நேரத்திற்கு முன்பாகவே தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும். தேர்வு மையத்திற்கு செல்லும் பொழுது எவ்வித பதட்டமின்றி தன்னம்பிக்கையோடு தேர்வு எழுத வேண்டும் எனவும்,
மே 3ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வில் நமது மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா.
Comments