ஆனைமலையில் 5 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி


இந்தியா தற்போது மோசமான சுகாதார அவசரநிலையை கொரோனா வடிவத்தில் எதிர்கொண்டுள்ளது. இது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது, ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான புதிய நோயாளிகள் பதிவாகின்றனர். இந்தியா இன்னும் "சமுதாய பரவல்" கட்டத்தில் இல்லை என்று அரசு கூறி வந்தாலும், புதிய நோயாளிகள் எண்ணிக்கை தினமும் தொடர்ந்து பதிவாகின்றன. கடந்த ஒரு வாரத்தில், குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் புதிய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.



இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் 5 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆனைமலையில் 144 தடை உத்தரவு கடமையாக் கப்பட்டுள்ளது தேவையில்லாமல் அனாவசியமாக வெளியே சுற்றித் திரியும் நபர்களை கண்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ள நிலையில் வருவாய் துறை சார்பாக தனி அறை அமைத்து ட்ரோன் மூலம் அதாவது பறக்கும் விமான கேமரா மூலம் ஆனைமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் வெளியே வந்து நடமாடு கிறார்களா தேவையில்லாமல் ஒன்று கூடு கிறார்களா என்று கழுகுப் பார்வையில் கண்காணித்து வருகிறது வருவாய்த்துறை. இந்த கண்காணிப்பின் மூலம் மக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்த்து வருகிறார்கள் ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோடு களிலும் வீதிகளிலும் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது இதை பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் அவர்கள் ஆனமலை சுற்றுவட்டார பகுதிகளை பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


நாளைய வரலாறு M. சுரேஷ்குமார் பொள்ளாச்சி.                        -MMH


 


Comments