கோவை போலீஸ் அதிகாரிகள் மாற்றம்..!

     -MMH


தமிழகம் முழுவதும் 51 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. கோவை போலீஸ் அதிகாரிகள் மாற்றம்:


கோவை மாநகர சட்டம் ஒழுங்கு உதவி ஆணையாளர் பாலாஜி சரவணன் அவர்கள், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம்.


கோவை மாநகரத்தின் புதிய சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக ஸ்டாலின் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், கோவை டிவிஏசி டிஎஸ்பி ஆகவும், சிபிசிஐடி கூடுதல் துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.


கோவை மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளர் நியமனம்..!


கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


இதையடுத்து, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அருள் அரசு, ஐபிஎஸ் கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜனை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2ம் தேதி பணியிடமாற்றம் செய்து சுஜித்குமார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


-ஜாபர்,ஊட்டி&கோவை.  


Comments