மருத்துவ மனையின் அலட்சியம்-இறந்த தங்கையை காணவில்லை அண்ணன் கதறல்.!

       -MMH


கொரோனாவால் பலியான தங்கை, கடைசிமுறையாக முகத்தை பார்த்த அண்ணனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி: உத்திர பிரதேசத்தில் யோகி ஆதித்ய நாத்தின் அரசும், அரசு நிர்வாகமும் எந்தளவுக்கு சீர்கேடு அடைந்துள்ளது என்பதற்கு எத்தனையோ சான்றுகளில் இதுவும் ஒன்று...!


உத்தரபிரதேச மாநிலம், பரேலியை சேர்ந்த அஞ்சூம் என்ற பெண்ணுக்கு மஞ்சள் காமாலை இருப்பதாக சொல்லி அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டார். ஆனால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதையடுத்து கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த அஞ்சூமுக்கு மூன்று குழந்தைகள். அவர் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டதால், அவரது உடலை சகோதரர் ஷெரிப் கானிடம் கொடுத்து அடக்கம் செய்ய கொடுத்துள்ளனர். கொரோனாவால் இறந்ததால் அஞ்சூமின் உடல் மூடப்பட்டு இருக்க, கடைசியாக ஒரு முறை அவரது முகத்தைப் பார்க்க, ஷெரிப் கான் அந்த பையை திறந்துள்ளார். ஆனால் அவருக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அந்த பையிக்குள் இருந்தது அவரது தங்கையின் உடல் இல்லை. இதை மருத்துவமனை ஊழியர்களிடம் அவர் சொல்ல ஊழியர்கள் தவறு நடந்துவிட்டதாகக் கூறி, அவர் தங்கை உடலை எடுத்துவருவதாக கூறியுள்ளனர்.


-H.முகமது சைஃபுல்லா,சென்னை மாவட்டம்.


Comments