குனியமுத்தூர் பகுதியில் மீண்டும் கொரோனா..!

         -MMH


கோவை குனியமுத்தூர் பகுதியில் பிரபல ஸ்வீட் கடையான நெல்லை முத்து விலாஸ் இந்த கடையின் மேல்தளத்தில் வசிக்கும்   தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளருக்கு கொரோனா   தோற்று ஏற்பட்டுள்ளது அதன் காரணமாக இன்று மாலை  அந்த கடை சீல் வைக்கப்பட்டது  அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பயங்கர பீதியில் உள்ளனர்.


பக்கத்தில் உள்ள கடைகளான மருந்து கடை, பேக்கரி மற்றும் சோபா செட் கடைகள் என அனைத்து ஸ்தாபனங்களும் மூடப்பட்டுள்ளது.கொரோனா தொற்று  பாதித்த நபரை   சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி நிர்வாகம்  அம்புலன்ஸ் மூலமாக கொடிசியா சிறப்பு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அந்தப் பகுதி இப்பொழுது கண்டைன்மெண்ட் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.மீண்டும் கொரோனா தொற்று தொடர்ச்சியாக:


குனியமுத்தூர் பகுதியில் அதிகரித்து கொண்டே இருக்கிறது  கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கீதா மருத்துவ மனையில் மருத்துவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அந்த பகுதி முழுவதும் தடைசெய்யபட்ட இடமாக அறிவிக்க பட்டநிலையில் மீண்டும் அதே பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் வணிகர்களும், பொதுமக்களும் மிகுந்த அச்சத்துடன் வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தன்னார்வலர்கள் கருதுகின்றனர்.


-மொய்தீன்,ஜாபர்.        


Comments