முட்புதரில் பெண்குழந்தை து வ ர ங் குறிச்சியில் பரபரப்பு..!

          -MMH


திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி மருத்துவமனை அருகே உள்ள தெருவில் கை குழந்தை ஒன்று முட்புதரில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஆய்வாளர் ஜெயதேவி, பெண் காவலர் ஜெயலெட்சுமி, மற்றும் போலீஸார் சென்று முட்செடிகளுக்கு நடுவே கிடந்த 10 மாதமே ஆன பெண்குழந்தையை மீட்ட னர்.


பின்பு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த குழந்தையை திருச்சி சைல்ட் லைனில் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் பெண் காவலர் ஜெயலட்சுமியை தவிர வேறு யாரிடம் சென்றாலும் அந்த குழந்தை அழத் தொடங்கியது முட்புதரில் இருந்து குழந்தையை மீட்டது முதல் அதற்கு பால், பிஸ்கட் கொடுத்து, கையிலேயே வைத்து, தட்டித் தூங்க வைத்த முதல்நிலை பெண் காவலர் ஜெயலட்சுமியை தாய் என நினைத்து பாசத்துடன் ஒட்டிக்கொண்டது.


சைல்ட் லைன் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதும் அழத் தொடங்கும் குழந்தை பெண் காவலர் ஜெயலட்சுமி கைக்கு வந்த உடனே அழுகையை நிறுத்தியதை பார்த்து அங்கிருந்தவர்கள் கண்ணீர் விட தொடங்கிவிட்டனர் முட்புதரில் குழந்தையை வீசி சென்றது யார் என்ற கோணத்தில் துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


குழந்தைகள் இன் நாட்டின் எதிர்காலத் தூண்கள் அவர்களை பாதுகாப்பது ஒவ்வொருவருடைய கடமையாகும் என்ற சிந்தனையோடு,


-நாளைய வரலாறு நிருபர் குழு.


Comments