அரசாணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!

   -MMH    

       அரசாணிக்காய் இதன் பூ பழம் பழத்தின் பட்டை மட்டுமே மருத்துவம் சார்ந்த பகுதியாகும் குணம் ஆகும். இருப்பினும் காய் பழத்தை உணவாக பயன் படுத்துவது உண்டு.

இந்திய திருநாட்டில் நோய்களை கட்டுப்படுத்த குறிப்பாக தீர்க்க உணவே மருந்தாக அமைந்திருக்கிறது. இதைப் பயன்படுத்தி நாம் இந்தியர்கள் நீண்ட நாள் வாழலாம் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

இதனை உணவாக பயன்படுத்தினால் மலச்சிக்கல் தீரும் உடலில் உள்ள உஷ்ணம் தணியும் சுமார் ஒரு ஸ்பூன் பரங்கி பருப்பும் சம அளவு நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து இரவில் உண்டு அதிகாலையில் ஆமணக்கு எண்ணெய் 50 மில்லி குடிக்க பேதியாகும். அதனுடன் மலம்  பூச்சி செத்து மலத்துடன் வெளிவரும். இதன் பூவை பெண்கள் தினம் தினம் அதிகாலையில் நுகர்ந்துவர கர்பப்பை பிரச்சனைகள் நீங்கும்.

இதுபோன்ற காய் கனிகள், பழங்கள், கீரை வகைகள் எடுத்துக்கொண்டு நம் வாழ்வில் சிறப்பாக வாழலாம் என்று கூறப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆரோக்கியராஜ், ஈசா.

Comments