பட்டுப்போன மரத்தை மீண்டும் துளிர்விட முயற்சிக்கும் ஆனைமலை மக்கள்!!

    -MMH 


 பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் அருகில் 20 ஆண்டு காலமாக பசுமையாக இருந்த மலை வேம்பு மரம் இப்பொழுது இலைகள் உதிர்ந்து காய்ந்து வருகிறது .மேலும் இதன் அடிப்பகுதியில் காயாமல் இருப்பதை கண்ட இப்பகுதியிலுள்ள தன்னார்வு அமைப்பை சேர்ந்தவர்கள் மீண்டும் இந்த மரத்தை பழைய நிலைக்கு கொண்டுவர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.



    அந்த வகையில் மரத்திற்கு பாத்தி அமைத்து சாணி தண்ணீர் ஊற்றி வைக்கோல் வைத்து கட்டி அந்த மரத்தை பாதுகாத்து வருகின்றனர். இவர்களுடைய செயலை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மனிதனுக்கு மனிதன் உதவி செய்ய தயங்கும் இந்த காலகட்டத்தில் மரங்களை பணத்துக்காக விற்பனை செய்து வரும் மனிதர்கள் மத்தியில் பட்டுப்போன மரத்தை மீண்டும் துளிர்விட முயற்சி மேற்கொண்டுள்ள இவர்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் தெரிவிக்கிறது நாளைய வரலாறு பத்திரிக்கை


மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற சிந்தனையோடு,


நாளை வரலாறு செய்திக்காக, 


-M.சுரேஷ் குமார்,கோவை தெற்கு.


Comments