கொரோனா தொற்றால் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார் .!!

     -MMH 


     டெல்லி:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் காலமானார்.


     டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. கோமா நிலையில் இருந்து சிகிச்சை பெற்று வந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார். இவரின் இழப்பு ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் 13-ஆவது குடியரசு தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


-சோலை, சேலம்.


Comments