தமிழகத்தில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!

     -MMH 


     தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவிப்பு. தமிழகத்தில் காலியாக உள்ள 10906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு குழுமம் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் இந்த மாதம் 26 ஆம் தேதி முதல் அக்டோபர் 26ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் அறிவிக்கப்பட்டுள்ளது.      பணியிடங்களுக்கு டிசம்பர் 13ம் தேதி தேர்தல் நடத்தப்படும் 37 மாவட்டங்களின் உள்ள தேர்வு மையங்களில் ஒரு மணி 20 நிமிடங்கள் எழுத்துத்தேர்வு நடைபெறும்.ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு3099 பெண்கள் திருநங்கைகள் உள்பட3784, தமிழ்நாடு சிறப்பு காவல் படை இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு6545, நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். சிறைத்துறை இரண்டாம் நிலை காவலர் பிரிவுக்கு119 நபர்கள் தேர்வாக உள்ளனர். தீயணைப்புத் துறையில் தீயணைப்பாளர் பதவிக்கு458 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள்  www.tnusrbonline.org. என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


-வினோத்குமார், கும்பகோணம்.


Comments