அதெப்படி பெரியாருக்கு வாழ்த்து சொல்லலாம்.!தமிழக பாஜக தலைவர் முருகனுக்கு எதிராக கொந்தளிப்பு.!

       -MMH


        சமூக நீதிக்காக போராடிய தந்தை பெரியாருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் எல். முருகனுக்கு அக்கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகம் முழுவது தந்தை பெரியாரின் 142-வது பிறந்த நாள் நேற்று எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. அதேபோல் பிரதமர் மோடியின் 70-வது பிறந்த நாளை பாஜகவினர் உற்சாகமாக கொண்டாடினர்.   இந்த கொண்டாட்டங்களின் போது செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக பாஜக தலைவர் எல். முருகன்,. அப்போது, சமூக நீதிக்காக போராடிய தந்தை பெரியாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்வதில் தவறு எதுவும் இல்லை என கூறி இருந்தார். முருகனின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.


   முருகனின் இந்த பேட்டியை முன்வைத்து அரசியல் கேஷ்யங்களும் கூட வலம்வரத் தொடங்கின. திராவிட கட்சிகளுடன் நெருக்கம் காட்டவும், அதிமுகவுடன் கூட்டணியில் தொடரவும் எல். முருகன் இப்படி பெரியாருக்கு வாழ்த்துச் சொல்கிறார் என்கின்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. இன்னொரு பக்கம் சமூக நீதியைப் பற்றிய புரிதலுடனேயே முருகன் பேசினார் எனவும் கூறப்பட்டது.


    இந்த நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியிலும் இந்துத்துவா அமைப்புகளிலும் முருகனின் இந்த பேட்டிக்கு கடு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமூக வலைதளங்களில் எல். முருகனின் இந்த பேட்டியை இந்துத்துவா ஆதரவாளர்கள் மிகக் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.


     பாஜக, இந்துத்துவா அமைப்புகளைப் பொறுத்தவரையில் தந்தை பெரியார்தான் பிரதான எதிரி; பெரியார் சிலைகளே தமிழகத்தில் இருக்கக் கூடாது என்பது எச். ராஜா போன்ற பாஜக மூத்த தலைவர்களின் பிரசாரம். இதற்கு நேர் எதிராக எல். முருகன் கருத்து தெரிவித்திருப்பதுதான் இத்தனை கொந்தளிப்புக்கும் காரணம்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக,


- B.செந்தில் முருகன், சென்னை தெற்கு.


Comments