மூத்த பத்திரிக்கையாளார் சுதாங்கன் உடல்நலக் குறைவால் காலமானார்!

     -MMH


     உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மூத்த பத்திரிக்கையாளர் 'சுதாங்கன்' சிகிச்சை பலனின்றி காலமானார். விகடன், தினமணி மற்றும் சில தொலைக்காட்சிகளில் பணியாற்றியவர் சுதாங்கன் . இவரது மறைவுக்கு பல்வேறு பத்திரிக்கையாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்


     தமிழ் பத்திரிக்கை உலகில் மிகவும் பிரபலமானவர் சுதாங்கன். பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றியவர். இவருக்கு கடந்த பத்து நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு OMRல் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையின் ICU பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.


     வீட்டில் இருக்கும்போது, தவறி விழுந்து தோளில் பலமான அடி ஏற்பட்டதாக கூறப்பட்டது. சுதாங்கன் அழைப்பின் பேரில் அவரது நண்பர் அவருடைய வீட்டுக்கு சென்றுள்ளார். உடனடியாக அவரை அப்போல்லோ மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பரிசோதனையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து மூச்சு விடுதலில் சிரமம் ஏற்பட்டதாக செய்தி வெளியானது.


     இவரது மகன் ஆகாஷ், துபாயில் இருக்கிறார். இவரது உடல்நலம் குறித்து நண்பர்களிடம் விசாரித்து வந்துள்ளார். தந்தையின் நிலையை அறிந்து இந்தியா வருவதற்கு முடிவு செய்து இருந்ததாக தெரிய வந்துள்ளது.


நாளைய வரலாறு செய்திகளுக்காக,


- B.செந்தில் முருகன், சென்னை தெற்கு.


Comments