நகரும் நியாய விலைக் கடை!! - அமைச்சர்கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்!!!
-MMH
நகரும் நியாய விலைக் கடை: அமைச்சர்கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார் !!!!! - திருப்பூர் மாவட்டத்தில் அம்மா நகரும் நியாய விலைக் கடை திட்டத்தை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை துவக்கி வைத்தார்.
உடுமலை ஏரிப்பாளையம் அருகே உள்ள கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் இந்தத் திட்டத்தை துவக்கி வைத்துப் பேசியதாவது.பொதுமக்களுக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 3,501 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் ரூ.9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் துவங்கப்பட்டுள்ளன.
இதில் திருப்பூர் மாவட்டத்தில் 77 நியாய விலைக் கடைகள் துவங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 8,236 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற உள்ளனர். இந்தக் கடைகள் மூலம் மாதம் ஒரு முறை குடும்ப அட்டைதாரர்களுக்கு வசதியான, அரசால் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் தாய்க் கடையின் விற்பனையாளர் நேரில் சென்று பொதுமக்களுக்கு பொருள்களை வழங்குவார்கள் என்றார்.கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பிரபு, துணைப் பதிவாளர் நர்மதா, மாவட்ட வழங்கல் அலுவலர் கணேஷ், உடுமலை கோட்டாட்சியர் க.ரவிக்குமார், துறை அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-கிரி,கோவை மாவட்டம்.
Comments