கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்த தன்னார்வலர்கள்!!!

  -MMH


     கொரோனாவல் உயிரிழந்த 12 பேரின் உடலை அடக்கம் செய்த தன்னார்வலர்கள்!!!


     ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களில் 12 பேரின் உடலை, கட்டணம் வசூல் செய்யாமல் அவரவர் மத வழக்கப்படி இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் அடக்கம் செய்து வருகின்றனர்.


     கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ள பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி எஸ்டிபிஐ கட்சி, பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தன்னார்வலர்கள் அடக்கம் செய்து வருகின்றனர்.


     இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் ஈரோடு மாவட்ட பொதுச் செயலாளர் முகமது லுக்மானுல் ஹக்கீம் கூறியதாவது:


     "கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்யக்கூட முடியாத நிலை இருந்து வருகிறது. இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் எங்களுடைய கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் தன்னார்வலர்களைக் கொண்ட குழுவை அமைத்து அதன் பின்னர் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ள பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருகிறோம். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்த 12 பேரின் உடல்களை அவர்களின் மத முறைப்படி அடக்கம் செய்துள்ளோம்". என்றார்.


நாளையவரலாறு செய்திக்காக,


-முஹம்மது ஹனீப், திருப்பூர்.


Comments