கோவை அருகே காட்டு யானை உயிரிழப்பு..!

      -MMH


     கோவை அருகே காட்டு யானை உயிரிழப்பு கோவை அருகே மேட்டுப்பாளையம் நெல்லித்துறை வனப் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க காட்டு யானை வியாழக்கிழமை மாலை உயிரிழந்தது. காலில் படுகாயத்துடன் சுற்றி திரிந்த காட்டு யானைக்கு கும்கி யானைகள் மூலம் சிகிச்சை அளிக்க வனத்துறை திட்டமிட்டனர் இதனையடுத்து அந்த வனப்பகுதிக்கு 2 கும்கி யானைகள், மருத்துவர்கள் குழு அழைத்துச் செல்லப்பட்டனர்.


       ஆனால் காட்டு யானை திடீரென வனப்பகுதிக்குள் நுழைந்தது. இதனால் வனப்பகுதியில் இருந்து அந்த யானையை சமவெளிக்குள் அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை வனப்பகுதியில் அந்த காட்டு யானை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. கோவை வனப்பகுதியில் இந்த ஆண்டில் உயிரிழந்த 20வது யானை இது. யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது வன ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


-அருண்குமார்,கோவை மேற்கு.


Comments