போத்தனூர் G.D.,பேருந்து நிறுத்த சந்திப்பில் அபாயம் !!

         -MMH 


     போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் இருந்து, வெள்ளலூர் பகுதிக்கு செல்லும் இணைப்புச் சாலை உள்ள பகுதியில் பல காரணங்களால் தோண்டப்பட்ட சாலை சீரமைக்கப்படாத காரணத்தினால், வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.     அந்த சாலை வழியாக செல்ல முடியாத காரணத்தால் பல வாகனங்களளும்  ஒரு வழிச்சாலையில் செல்கிறது.இதும் பெரிய விபத்துகளில் தான் கொண்டு செல்லும்.     மேலும் இரவு வேளைகளில் மற்றும் அதிகாலை வேளைகளில் இந்தப் பகுதியில்  டிப்பர் லோடு ஏற்றி வரும் லாரிகள் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சாலையும் கூட, இந்தப் பகுதியில் விபத்து என்பது தொடர்கதையாகவே உள்ளது. ஏற்கனவே  பேரியக்கத்தை சேர்ந்த ஒருவர்  இந்தப் பகுதியில் ஒரு விபத்தில் இறந்தார்கள்.இதுபோல் சிறுசிறு விபத்துகள் நடப்பது தொடர்ந்த வண்ணமாகவே உள்ளது.எனவே   மாநகராட்சி நிர்வாகம் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற கேள்வியை  எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.-பீர் முஹம்மது,குறிச்சி.


Comments