தமிழகத்தில் மளிகை பொருட்கள் விலை ஏறும் அபாயம்..!

      -MMH


         தமிழகத்தில் மளிகை பொருட்களின் விலை வரக்கூடிய நாட்களில் உயரும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதன் பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வந்ததால், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு 60 சதவீதம் பொருட்கள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன.


        இதை தொடர்ந்து, ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்ட பின் அங்கு தொடர் கனமழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு, மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்தும் அதிக அளவில் மேற்கொள்ளப்படவில்லை.இதனால், தமிழகத்திற்கு வர வேண்டிய தானிய வகைகள் உட்பட, மளிகை பொருட்களின் விலை 20% முதல் 30% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


-ஸ்டார் வெங்கட்.


Comments