மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தி.மு.க.வினர் போராட்டம்!!

         -MMH  


     திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக திமுக சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



     மத்திய பாஜக அரசு இச்சட்டம் கொண்டு வந்ததன் நோக்கம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவும் நுகர்வோர் மற்றும் விவசாயிகளுக்கு எதிராகவும் கொண்டுவரப்பட்டுள்ளது சில்லறை வணிகம் பண்ணை ஒப்பந்த விவசாயிகளை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமையாக்குவது. இது போன்று எண்ணற்ற வகையில் விவசாயிகளை அளிக்கின்ற இச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி திமுக மற்றும் கூட்டணிக் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.



     துங்காவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஒன்றிய செயலாளர் சதீஷ் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்க ஒன்றிய தலைவர் முத்துசாமி , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற தொகுதி செயலாளர் ஈஸ்வரன் , ஒன்றிய செயலாளர் சிட்டிபாபு , திராவிடர் கழகத்தின் சார்பில் வெங்கடாசலம் கண்ணன் மற்றும் கிறிஸ்துவ சமூக நீதிப் பேரவை மாவட்ட அமைப்பாளர் இமானுவேல் அருள் குமார் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் சேதுபாலு, கோவிந்தசாமி, தீபிகாமுருகானந்தம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


-துல்கர்னி.


Comments