கோவை மாநகராட்சி கமிஷனர் அதிரடி உத்தரவு! சாலை ஓரத்தில் மண் அள்ள..!

        -MMH


        கோவையில் ரோட்டோரத்தில் படர்ந்திருக்கும் மணலை அள்ள, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.கோவை மாநகராட்சி கமிஷனர், தினமும் ஒரு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்து வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு, அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்குகிறார். நேற்று, மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில், கள ஆய்வு செய்தார்.


       திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும்; அவ்விடங்களில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இனியும் நகரில் குப்பை பரவிக் கிடக்கக்கூடாது' என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது, உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ், நிர்வாக பொறியாளர் சசிப்பிரியா, உதவி நிர்வாக பொறியாளர் கருப்பசாமி, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


-சோலை, சேலம்.


Comments