சென்னையில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி!! - மின்வாரிய ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட்!!

      -MMH   


     சென்னை புளியந்தோப்பில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி. மின்வாரிய ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட்:


     சென்னை புளியந்தோப்பில் மின்சாரம் பாய்ந்து பெண் ஒருவர் பலியான சம்பவத்தில் மின்வாரிய ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள்.     சென்னை பெரியார் நகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் அலிமா(35). இவரது கணவர் ஷேக் அப்துல் மற்றும் ஒரு மகன் ஆகியோரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.


     இவர் புளியந்தோப்பு நாராயணசாமி தெரு பகுதியில் உள்ள சாகிதா பேகம் என்பவர் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு அலிமா வீட்டு வேலை செய்வதற்காக நாராயணசுவாமி தெரு வழியாக சென்று கொண்டு இருந்தார்.     அப்போது சாலையில் தண்ணீரும் சேறுமாக இருந்ததால் ஓரமாக நடந்து வந்தார். அப்போது பூமிக்கடியில் புதையுண்டு கிடந்த மின் கேபிள் வெளியே வந்து கிடந்தது. அந்த கம்பியை மிதித்த அலிமா அதே இடத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துவிட்டார். இது போன்று கம்பி வெளியே வந்துள்ளது என கடந்த 20 நாட்களுக்கு முன்தாகவே புகார் தெரிவித்தும் மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த நிலையில் மின்சாரம் பாய்ந்து பெண் பலியான சம்பவத்தில் இரு மின் ஊழியர்களான உதவி கோட்ட மின்பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் வெங்கட்ராமன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக,


- B.செந்தில் முருகன், சென்னை தெற்கு.


Comments