நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி ஒருவர் பலி!! - பொள்ளாச்சியில் பரிதாபம்!!

     -MMH


     பொள்ளாச்சியை அடுத்த ஊஞ்சவேலாம்பட்டியில் நின்று கொண்டு இருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


     அதிக வாகன போக்குவரத்து நிறைந்த பொள்ளாச்சி பழனி வழித்தடத்தில் பொள்ளாச்சியில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஊஞ்சவேலாம்பட்டி எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரியும் கதிர்வேல் என்பவர் தனது அலுவலக வேலையை முடித்து கொண்டு தன் இருசக்கர வாகனத்தில் வீடு திருப்பி கொண்டிருந்தார் அப்போது தன் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது இந்த கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே மிகவும் பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.      அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் அவருக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது மேலும் அவரது மனைவி தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார் கணவர் இருந்த செய்தியை கேட்ட அவரது மனைவி மற்றும் அவரது தாய் ஆகியோர் கதறி அழுத்த சம்பவம் கல் மனதையும் கரைக்கும் விதமாக அமைந்து இருந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொள்ளாச்சி கிழக்கு மண்டல போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.      நின்று கொண்டு இருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையில் பெரும் சோகத்தை எற்படுத்தி உள்ளது.


நாளைய வரலாறு செய்திகளுக்காக, 


-V.ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments