அமைச்சரின் PA கடத்தல்!! - அ.தி.மு.க.,வில் பரபரப்பு..!!

    -MMH


     உடுமலையில் பட்டப்பகலில் கத்தி முனையில் கடத்தப்பட்ட உடுமலை ராதாகிருஷ்ணனின் PA க்கு  நடந்தது என்ன?


     ஆளும் கட்சி MLA வும் கால்நடைத்துறை அமைச்சரும் ஆன திரு .உடுமலை ராதாகிருஷ்ணணின் நேரடி உதவியாளரும், PA வும் ஆன 'கர்ணன்' அவர்கள் பொள்ளாச்சியை அடுத்து உடுமலைபேட்டையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் புகுந்த மர்மநபர்கள் சிலரால் கத்தி மற்றும் துப்பாக்கி முனையில் கடத்தி செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காளிப்பாளர் 'திஷா மிட்டல்' தலைமையில் உடுமலை அன்சார் வீதியில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தின் சிசிடிவி பதிவுகளின் படி விசாரணையை துவங்கினர்.இதனை தொடர்ந்து உடனடியாக போலீசார் உடுமலை பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.     போலீசார் இந்த வாகன தணிக்கையால் அச்சமடைந்த மர்ம நபர்கள் அவரை பொள்ளாச்சி உடுமலையை அடுத்த தளி என்ற இடத்தில் இறக்கி விட்டது தெரிய வந்தது.


    உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கர்ணனை பத்திரமாக மீட்டனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடத்தல் காரர்கள் கத்தி துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் தற்போது உள்ள அரசியல் குறித்தும் திரு உடுமலை ராதாகிருஷ்ணனின் அரசியல் நகர்வுகள் குறித்தும் தம்மிடம் சில கேள்விகளை கேட்டதாகவும் அதற்கு தம் பதில் எதுவும் அளிக்காததால் தான் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் மற்றும் 1 பவுன் மோதிரத்தை பறித்து கொண்டதாகவும் பின்னர் அணைத்து சாலைகளிலும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருப்பதை கண்டு தன்னை உடுமலைபேட்டை அடுத்த வாழவாடி என்ற இடத்தில் காரில் இருந்து இறக்கி விட்டதாகவும் பின்னர் தான் அங்கிருந்து தளி என்ற இடத்திற்கு வந்த தன்னை போலீசார் பத்திரமாக மீட்க்கப்பட்டதாகவும் கூறினார்.


 


     இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை பிடிக்க தனி படை முடிக்கி விடப்பட்டு உள்ளது.மேலும் குற்றவாளிகள் குறித்த பல தகவல்களை பெற கர்ணனிடம் தீவிரமாக விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார்.


    பட்டப்பகலில் கத்தி முனையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து உடுமலை ராதாகிருஷ்ணணின் PA காரில் கடத்தப்பட்டு பின்னர் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் மட்டுமல்லாது அரசியல் வட்டாரத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


நாளையவரலாறு செய்திகளுக்காக,


-V.ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.சேலம்,சோலை.


 


 


 


 


Comments