ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட பூமி பூஜையை துவக்கி வைத்தர் பொள்ளாச்சி ஜெயராமன் !!

     -MMH


     பொள்ளாச்சி அடுத்த மேட்டுப்பாளையத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட பூமி பூஜையை துவக்கி வைத்தர் பொள்ளாச்சி ஜெயராமன்.


      மேட்டுபாளையம் மக்கள் தங்கள் ஊருக்கு ஊராட்சி மன்ற அலுவலகம் ஒன்றை அமைத்து தருமாறு பல நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது 22.65 லட்சம் ரூபாய் மதிப்பில் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் ஊராட்சி மன்ற கட்டிடம் அமைய இருக்கிறது.     அதற்கான தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட்டு கட்டிடத்துக்கான பூமி பூஜை போடப்பட்டது.இதில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இது குறித்து அவர் கூறுகையில்," பொள்ளாச்சி மேட்டுப்பாளையத்தில் இன்னும் ஒருசில மாதங்களுக்குள் ஊராட்சி மன்றத்தின் கட்டிட பணிகள் நிறைவடைந்து விரைவில் அலுவலகம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறும்". எனவும் கூறினார்.     மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை எற்று பொள்ளாச்சி மேட்டுப்பாளையம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட தமிழக அரசிடம் இருந்து ரூபாய் 22.65 லட்சம் நிதி பெற்று தந்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களுக்கு அப்பகுதி மக்கள் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.


நாளைய வரலாறு செய்திக்காக, 


-V.ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.


Comments