கும்பகோணம் நகராட்சியின் அலட்சியம்! - முக்கிய சாலைகளில் அடிக்கடி விபத்து.!

             -MMH


    கும்பகோணம் மையப்பகுதியில் மரணக்குழி. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகாவின் மையப்பகுதியான உச்சி பிள்ளையார் கோவில் இந்த பகுதியானது கும்பகோணம் நகராட்சி மையப்பகுதி ஆகும் இங்கு ஜவுளிக் கடைகளும் நகைக் கடையிலும் வங்கித்துறை களும் நிறைந்துள்ள ஒரு நெருக்கமான பகுதியாகும்.  கும்பேஸ்வரர் கோயில் சோமேஸ்வரர் கோயில் சாரங்கபாணி கோவில் ஆகிய கோயில்களுக்கு செல்லும் பிரதான சாலை ஆகும். அதுமட்டுமின்றி தஞ்சாவூர் செல்ல அனைத்து வாகனங்களும் இந்த ரோட்டில்தான் செல்ல வேண்டும். இவ்வாறு அதிக முக்கியம் வாய்ந்த சாலையில் குழிகள் தோண்டப்பட்டு. கடந்த 20 நாட்களுக்கு மேல் அதை சரி செய்யாமல் வைத்துள்ளது கும்பகோணம் நகராட்சி.


   சுற்றுவட்டார ஊர்களில் இருந்து இரவு நேரங்களில் கும்பகோணம் மார்க்கெட்டிற்கு நிறைய வாகனங்கள் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 நாட்களாக இங்கு  சிறு சிறு விபத்துகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது மிக விரைவில் கும்பகோணம் நகராட்சி மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த குழிகளை  சரி செய்யுமாறு அப்பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.


கும்பகோணத்திலிருந்து,


-வினோத் குமார்.


Comments