கோவை குறிச்சி பகுதியில் மர்ம நபர்கள் கைவரிசை!!

     -MMH


     கோவை மாவட்டம் குறிச்சி பகுதியில் மர்ம நபர்கள் கைவரிசை!!!! -


     கோவை மாவட்டம் சுந்தராபுரம் குறிச்சி பகுதியில் உள்ள வெங்கடாஜலபதி நகர் அருகே சுகாதார நிலையம் அமைந்த பகுதியில் மற்றும் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் அங்கே வசிக்கும் மேரி என்கிற பெண் வயது 65 ஓய்வு பெற்ற காவலர் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு வெளியே வந்த பொழுது மர்மநபர்கள் 2 பேர் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கழுத்தில் அணிந்திருந்த ஆபரணத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்றுவிட்டனர். அந்தப்பெண் கூக்குரலிடும் மர்ம நபர்கள் தப்பிவிட்டனர். சுந்தரபுரம் குறிச்சி போத்தனூர் சுற்றுவட்டார பகுதிகளில் இது போல சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டிருக்கின்றனர்.     மேலும் இரவு நேரங்களில் அந்தப் பகுதிகளில் உள்ள மின் விளக்குகள் சரியாக பராமரிப்பில்லாமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டு இது போல சம்பவங்கள் நடப்பதற்கு மாநகராட்சியின் சரியான நடவடிக்கை எடுப்பதில்லை. மின் விளக்குகள் சரியாக பராமரிக்கப்படாமல் இப்போதும் இது போல திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதற்கும் ஏதுவாக இருக்கிறது. ஆகையால் வெங்கடாசலபதி நகர் பகுதி மக்களும் மற்றும் குறிச்சி நகர பகுதி மக்களும் கவலையுடன் இருக்கிறார்கள்.


-கிரி,கோவை மாவட்டம்.


.


Comments